TVK

தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அக்கட்சி அவசர உத்தரவை பிறப்பித்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. ஒருபுறம் தவெக துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், துணை சபாநாயகர் ரவி சங்கர், கார்த்தி என்கிற நபரை அவரது தொகுதியில் தாக்கியதாக வீடியோ வெளியானது. அவர் தன்னை தாக்கவில்லை என முதலில் வீடியோ வெளியிட்டார் கார்த்திக். இரண்டாவதாக மிரட்டிதான் தாக்கினார் என வீடியோ வெளியிட்டார். மறுபுறம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஒரு புகார் சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிடப்படுகிறது. இப்படியாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது புகார்கள் இணையதளத்தில பரவி கொண்டிருக்க முக்கியமான அவசர ஆலோசனை கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டம் முடிவு செய்திருக்கிறார்.

அந்த அடிப்படையில் கட்சி தலைமை அலுவலகத்தில நாளை மறுநாள் முதலமைச்சர் தலைமையில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் குறுஞ்செய்தியின் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது,

இதையும் படியுங்க  விவாகரத்து வேண்டாம்.. வாபஸ் பெற்ற சங்கீதா..! 20 நிமிட கெடு… லண்டனில் இருந்து ஒரே 'U-Turn'! உடைந்த ரகசியம்!

நேற்று காலையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த மெசேஜ் கொண்டு சேர்க்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை நடைபெறக்கூடிய இந்த அவசர ஆலோசனை கூட்டம் முக்கியமான ஆலோசனை கூட்டம் என்றும் இதில் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் தவெக தலைமை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது தொடர்பாக இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *