Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Dhanush

அரசியலில் இறங்க தனுஷ் காட்டக்கூடிய வேகம் சற்று ஆச்சரியப்படவே வைத்திருக்கிறது. இவ்வளவு நாளாக அரசியலுக்கும், தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல இருந்தவர் தான் தனுஷ். நடிப்பு அரக்கன் என பெயர் வாங்கினாலும் சமீபகாலமாக ஆடியோ லாஞ்ச் மேடைகளில் பொடி வைத்து தனுஷ் பேசக்கூடிய பேச்சுக்கள் கூட ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டன.

அசுரன், கர்ணன் போன்ற சமூக அவலங்கள் சார்ந்த படங்களில் ஹீரோவாக நடித்ததை தாண்டி நிகழ்கால பிரச்சனைகள் எதற்குமே தனுஷ் குரல் கொடுத்ததும் இல்லை. முதலமைச்சர் விஜயாவது நடிகராக இருக்கும் போதே தனது மக்கள் இயக்கத்தின் மூலமாக பல நலத்திட்ட உதவிகளை செய்ததோடு நீட், ஜல்லிக்கட்டு, மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சினைகளில் குரல் கொடுத்தார். ஆனாலும் அரசியலில் இறங்க முழுமூச்சாக வேலை செய்து வருகிறார் தனுஷ். அரசியலில் இறங்கும் ஆசைகளால் கடந்த வாரம் தனுஷ் டெல்லிக்கு விசிட் அடித்த நிலையில், அந்த விசிட்டிங் பின்னணி என்ன? என்பது தெரிய வந்துள்ளது.

Dhanush'

2026 தேர்தல் முடிவுகள் தனுஷின் அரசியல் ஆசைக்கு உரமூட்ட, முதலில் அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபடலாம் என யோசித்ததாக கூறப்படுகிறது. துவண்டு கிடக்கும் அதிமுகவை தூக்கி நிறுத்தலாம் என தலைமைக்கு தூது அனுப்பி இருக்கிறார் தனுஷ். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இணைப்பது என தனுஷ் அனுப்பிய தூதுக்கு அதிமுக தலைமை ரெட்கார்டு போட்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே அதிகாரம் மிக்க இணை பொதுச் செயலாளர் பதவி கேட்ட தனுஷின் ஆசையை எடப்பாடி பழனிசாமி சரப்பு நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்க  தவெக அரசுக்கு குழி பறிக்கும் கூட்டணி அமைச்சர்கள்..! கடும் ஆத்திரத்தில் பாஜக..! விஜய்க்கு சிக்கல்..!

தனுஷை அதிமுகவில் இணைக்க வேண்டும் என டெல்லியில் இருந்து தான் இபிஎஸ்க்கு மெசேஜ் வந்திருக்கிறது. ஆனாலும் இணைப் பொதுச் செயலாளர் பதவியை கொடுக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுப்பு வந்த நிலையில் தான் டெல்லிக்கு விசிட் அடித்தாராம் தனுஷ். அடுத்த கட்டமாக தனிக்கட்சி தொடங்குவதா? அல்லது அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதா? என பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சிலரை சந்தித்து தனுஷ் ஆலோசனை நடத்தியதாக தகவலும் கசிந்துள்ளது.

இதுவரையிலும் தமிழ்நாட்டில் அரசியலுக்கு வந்த நடிகர்களில் எம்ஜிஆர், சரத்குமார், டி.ராஜேந்தர், பாக்கியராஜ் போன்றோர் ஏற்கனவே இருந்த கட்சிகளில் இணைத்துக் கொண்டு முக்கிய பொறுப்புகளை வகித்த பின்னரே தனி கட்சி தொடங்கினர். எம்ஜிஆர் தனது நீண்ட கால அரசியல் அனுபவத்திற்கு பிறகு தனிக்காட்சி கண்டு ஆட்சியைப் பிடித்தார். அதேசமயம் கேப்டன் விஜயகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் விஜய் ஆகியோர் எந்த கட்சியிலும் பயணிக்காமல் தனி கட்சி தொடங்கினர். விஜயகாந்த் முதல் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார். ஆனால் விஜய் முதல் தேர்தலிலேயே அபார வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டார்.

இதையும் படியுங்க  "ரீல் ஹீரோ இல்ல.. ரியல் ஹீரோவா மாறுங்க!" விஜய்யின் 100 நாள் ஆட்சியை நோக்கி சீறிய பிரேமலதா விஜயகாந்த்!
eps

இதில் தனுஷ் எந்த வழியை தேர்ந்தெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சினிமாவில் பிரபலமான நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் தற்போது தான் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார். ஆகையால் விஜய் போல தனுஷ் சினிமாவுக்கு ஒழுக்கு போட முடியாது என்று கருதப்படுகிறது. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்த கதை போல ஆகிவிடும். கமல்ஹாசன் எப்படி மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கி பார்ட் டைம் அரசியல்வாதி என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி வைத்தாரோ, அதே மாதிரி தனுஷின் நிலைமையும் ஆகக் கூடும். இதனால்தான் சினிமா கரியருக்கு பங்கம் வராமல் அரசியல் ரீதியாக செயல்பட ஏற்கனவே இருக்கக்கூடிய அதிமுக மாதிரியான கட்சியில் முக்கிய பொறுப்பை வாங்கி கொள்ளலாம் என தனுஷ் யோசித்ததாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டே தனி கட்சி தொடங்கி, துணை முதலமைச்சர் ஆன ஆந்திராவின் பவன் கல்யாண் பார்முலாவும் தனுஷின் மைண்டில் இருப்பதாக பேசிக்கொள்ளப்படுகிறது. பொதுவாகவே தனுஷின் பேச்சுக்கள் சமூக வலைதள பதிவுகளில் அதீத ஆன்மீக ஈடுபாடு வெளிப்படும். அதற்கு ஏற்ப டெல்லிக்கு சென்று பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தனுஷ் சந்தித்ததாக தகவலும் வெளியாகி உள்ளது. ஆகையால், தனுஷின் அரசியல் பாதை கிட்டத்தட்ட வலதுசாரி சிந்தனையுடைய பாதையாகத்தான் இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக..! 4 மண்டலங்களிலும் வாஷ் அவுட்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா..?
Republic Tamil

அண்மையில் தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்ட போது தனுஷ் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கலாம் என்று பேசிக்கொள்ளப்பட்டது. தற்போது அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அரசியலில் இறங்கும் முன்பு டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்தி இருக்கிறார் தனுஷ். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு பிரதானம் என்ற சூழலில் டெல்லி பேனரில் களமிறங்கும் தனுஷின் அரசியல் எதிர்காலம் சுபிக்ஷமாக இருக்கு?மா இல்லை சோதனையாக இருக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago