Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

MGR

சென்னையின் முக்கியப் பிரதான பகுதியான அண்ணாநகரில் அமைந்துள்ள அண்ணா தொழிற்சங்கத்திற்குச் சொந்தமான சுமார் 3 கிரவுண்ட் நிலம் தற்போது அதிமுகவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

எம்ஜிஆரின் கனவு
கடந்த 1984 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுவனங்கள், பிரைவேட் கம்பெனிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த எளிய தொழிலாளர்களிடம் தலா 10 ரூபாய் வீதம் சந்தா பணம் வசூலிக்கப்பட்டது. உழைக்கும் தொழிலாளர்களுக்கு என்று சொந்தமாக ஒரு பிரம்மாண்டமான தலைமை அலுவலகம் இருக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் ஆசைக்காக, தொழிலாளர்கள் வியர்வை சிந்தி சேகரித்த அந்தப் பணத்தைக் கொண்டு இந்த 3 கிரவுண்ட் இடம் வாங்கப்பட்டு தொழிற்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க ஏழைத் தொழிலாளர்களின் புனிதச் சொத்தாகக் கருதப்பட்டது.

EPS

கை மாறிய அதிகாரம்-வளைக்கப்பட்ட நிலம்
காலப்போக்கில் 2012-ல் சின்னசாமி அண்ணா தொழிற்சங்க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். அப்போது ‘அண்ணா தொழிற்சங்க டிரஸ்ட்’ ஒன்று உருவாக்கப்பட்டு அந்த நிலம் அதன் பெயருக்கு மாற்றப்பட்டது. அந்தச் சமயத்தில் கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அந்த டிரஸ்டும் அவர் கைக்குச் சென்றது. அதனைத் தொடர்ந்து கமலக்கண்ணன் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார்.

இதையும் படியுங்க  திமுக கூட்டணியை உடைக்கணும்.. பாஜக-வை சிதைக்கணும்.. விஜய் போடும் மெகா ஸ்கெட்ச்..!

ஆனால், உண்மையான பிரச்சனைகள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகி கட்சிக்குள் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பிறகே தொடங்கின. 2021-ல் எடப்பாடி பழனிசாமியின் ரகசிய உத்தரவின்பேரில், டி.நகர் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா மூலமாக இந்த 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனிப்பட்ட பயன்பாட்டுக்காகச் சுத்தம் செய்து ஆக்கிரமிக்க முயற்சிகள் நடந்துள்ள.

கமலக்கண்ணனின் எதிர்ப்பு
விஷயத்தை அறிந்த அன்றைய தொழிற்சங்க பொதுச்செயலாளர் கமலக்கண்ணன், “இது ஏழைத் தொழிலாளர்கள் 10 ரூபாயாகப் போட்டு எம்ஜிஆர் வாங்கித் தந்த புனித இடம். இதில் கை வைக்க யாருக்கு அதிகாரம் இல்லை?” என்று நேருக்கு நேராக நின்று தடுத்தார். இந்த இடத்தை 99 வருட லீஸுக்குக் கொடுத்துவிட வேண்டும் அல்லது விற்றுப் பணமாக்க வேண்டும் என்ற எடப்பாடியின் திட்டத்திற்கு கமலக்கண்ணன் முட்டுக்கட்டை போட்டார்.

இதனால் எடப்பாடிக்கும், கமலக்கண்ணனுக்கும் இடையே மோதல் வெடித்தது. கட்சிக்குள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட நெருக்குதல்களாலும், இந்த அநியாயத்தை எதிர்க்க முடியாமலும் தவித்த கமலக்கண்ணன் அதிமுகவில் இருந்து விலகி, தற்போது தவெக இணைந்தார்.

இதையும் படியுங்க  டிஆர்பி அரசியலா? விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சுக்கு  'பதில்' சொன்ன விஜய் டிவி!
Edappadi

கமலக்கண்ணன் வெளியேறியதும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழி சுலபமாகிவிட்டது. மீண்டும் முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவை களமிறக்கி, அந்த 3 கிரவுண்ட் நிலத்தை 99 வருட லீஸுக்கு விடுவதற்கோ அல்லது பினாமிகள் மூலமாக விற்றுப் பணமாக்குவதற்கோ தீவிர முயற்சிகள் நடந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 99 வருட லீஸ் என்பதே கிட்டத்தட்ட சொத்தை விற்பதற்குச் சமம்.

இதுகுறித்து பேசிய முன்னாள் பொதுச்செயலாளர் கமலக்கண்ணன், “2021-லேயே இந்த 50 கோடி நிலத்தை விற்கத் திட்டம் போட்டார்கள். நான் இருந்த வரைக்கும் என் சக்திக்கு மீறி அதைத் தடுத்து நிறுத்தினேன். அதனாலேயே என்னை ஓரம் கட்டினார்கள். இப்போது நான் வெளியே வந்ததும்தான் அவர்களுக்கு அந்த இடத்தை விற்க ரொம்ப எளிதாகிவிட்டது” என்று ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago