Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று நாகப்பட்டினம் சிறு துறைமுகங்கள் வழியாக தவெக பிரமுகர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மெத் பெட்டமைன் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம். நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர் தவெக-வில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா இலங்கைத் தமிழர்.

வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர்ந்தவர் சுகன். இவர் வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றை லீஸ்க்கு எடுத்து நடத்தி வந்தார். நாகப்பட்டினத்தில் இருந்து இலைங்கைக்கு கடல் வழியாக மெத்தபெட்டமைன் கடத்த இருப்பதை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கடந்த 16ம் தேதி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சுகன் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சுகன் வீட்டில் இருந்து 135 கிலோ மெத் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.270 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

இது குறித்து சுகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பூபலனைக் கைகாட்டினார். பூபாலன் தலைமையில் இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. இதுதொடர்பாக பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரைக் கைது செய்து விசாரித்த பின்னர் சிறையில் அடைத்தனர். தவெக நிர்வாகி மெத் கடத்தலில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதையும் படியுங்க  "பர்கர் சாப்பிட்டாலும் தப்பா? முடி வெட்டுனாலும் தப்பா?" "என்னை ஒரு பெண்ணாக மதியுங்கள்" என மேயர் பிரியா ஆவேசம்!

தவெக ஆட்சியில் ஏற்கனவே சில முக்கிய வழக்குகளும், சர்ச்சைகளும் நிலவி வரும் சூழலில், தற்போது இந்த ‘மெத்பெட்டமைன்’ விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அதன் பின்னணி குறித்து மத்திய அமைப்புகள் கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளது.

மத்திய அமைப்புகள் எப்போதுமே திடீரென சோதனைகளை நடத்துவதில்லை. மாறாக, ரூட்களை ஆராய்ந்து, நீண்ட காலத் திட்டமிடலுக்குப் பிறகே களத்தில் இறங்கும். இந்த வழக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய ஆபத்து என்னவென்றால், இது வெறும் சப்ளை நெட்வொர்க் அல்லாமல், ‘மெத்பெட்டமைன்’ தயாரிப்புக்கான லேப் மற்றும் கெமிக்கல் கொள்முதல் வரை நீள்வதாகக் கூறப்படுவது. நாகப்பட்டினம் மற்றும் சிறு துறைமுகப் பகுதிகள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இது மாநிலத்தின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட ஒரு பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை களமிறங்குவதற்கான வரம்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகள் ஆகும். ஆனால், இந்த ‘மெத்பெட்டமைன்’ வழக்கில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகமும் இதுதொடர்பாக நூறு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை உறுதி செய்துள்ளது. இவ்வளவு பெரிய அளவில் பணம் புழங்கும்போது, அங்கு நிச்சயம் பணப் பரிமாற்றத்திற்கான தடயங்கள்), கேஷ் கன்வெர்ஷன் அல்லது ஹவாலா பரிவர்த்தனைகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்க  இந்தியாவின் ‘டொனால்ட் ட்ரம்ப்’ ஆகிறார் ராகுல் காந்தி..! சீக்ரெட் அரசியலின் அதிரடி பின்னணி..!

எனவே, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை உள்ளே நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. நாகப்பட்டினம் ரூட் என்றாலே கடந்த கால வரலாற்று நிகழ்வுகளும் இலங்கைத் பிரச்சினைகளும் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. 1980களில் (89-90 காலகட்டங்களில்) விடுதலைப் புலிகள் மற்றும் பிற அமைப்புகளின் மூலம் ஏற்பட்ட பாதுகாப்புச் சிக்கல்களை இந்தச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. வேதாரண்யம் போன்ற கடலோரப் பகுதிகள் வழியாக எளிதில் எல்லை தாண்டி வரக்கூடிய புவியியல் சூழல் இருப்பதால், இலங்கைத் தொடர்புகள் குறித்த சந்தேகங்கள் தீவிரமடைந்துள்ளன.

வரலாற்று ரீதியாகவே இந்த வழித்தடங்களில் உள்ள நெட்வொர்க்குகள் மற்றும் கடத்தல் முயற்சிகள் கடுமையான தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளன. தற்போது போதைப்பொருள் கடத்தலுக்கும் இலங்கைக்கும் ஏதேனும் நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் அரசியல் ரீதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டு அரசை நோக்கிக் கேள்விகளை எழுப்பி வருகிறார். அதேசமயம், தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாகியுள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு முறையான பதில்கள் வராத சூழலிலும், இவ்வளவு பெரிய தேசிய பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விவகாரத்திலும் முன்னணி அரசியல் தலைவர்கள் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்க  தவெகவுக்கு ஆதரவளித்தால் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிபோகும்..!? சட்டம் என்ன சொல்கிறது..?
Vijay’

“வாய திறங்க விஜய்” என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்படும் நிலையில், இந்த விவகாரம் தவெக நிர்வாகியின் மட்டம் வரை மட்டுமே நிற்குமா? அல்லது அதற்கும் மேல் உள்ள முக்கிய புள்ளிகளை நோக்கி நீளுமா? என்ற சந்தேகம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகப் பகுதியில் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த ‘மெத்பெட்டமைன்’ கடத்தல் விவகாரம் வெறும் உள்ளூர் குற்றச் செயல் அல்லாமல், மத்திய அமைப்புகளின் நேரடி கண்காணிப்பு, அமலாக்கத்துறையின் நுழைவு மற்றும் தேசியப் பாதுகாப்பு எல்லைகளைத் தொடும் ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது. இதன் முழு உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் தமிழக அரசியலில் இது பெரும் திருப்பங்களை ஏற்படுத்தலாம்” என மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.மத்திய அமைப்புகளின் நேரடி கண்காணிப்பு, அமலாக்கத்துறையின் நுழைவு மற்றும் தேசியப் பாதுகாப்பு எல்லைகளைத் தொடும் ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது. இதன் முழு உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் தமிழக அரசியலில் இது பெரும் திருப்பங்களை ஏற்படுத்தலாம்” என மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago