Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Saravanan

சென்னை, விருகம்பாக்கத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி வழக்கறிஞரிடம் 40 லட்சம் ரூபாயை மோசடி செய்த சின்னத்திரை நடிகர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனை பிரிந்த பெண் வழக்கறிஞர் ஒருவரும், தொலைக்காட்சி தொடரில் நடித்த சரவணனும் ஒன்றாக வசித்த நிலையில், திருமணம் செய்ய மறுப்பதாக அப்பெண் போலீஸில் புகாரளித்தன் அடிப்படியின் நடிகர் சரவணன் கைடு செய்யப்பட்டுள்ளார்.

திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து மக்கள் மத்தியில் முகம் தெரிந்த நடிகராக வலம் வந்த சரவணனின் நிஜ வாழ்க்கைக்குப் பின்னால் இவ்வளவு பெரிய கறுப்புப் பக்கம் ஒளிந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விருகம்பாக்கத்தில் நடந்த இந்தச் சம்பவம், தற்போது சென்னை வட்டாரத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

ஆசை வார்த்தை காட்டி வலை
கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த பெண் வழக்கறிஞர் ஒருவருடன் நடிகருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், “உன்னை விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன்” என நடிகர் சரவணன் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். சரவணனின் பேச்சை உண்மையென நம்பிய அந்தப் பெண் வழக்கறிஞர், பல்வேறு கட்டங்களாகச் சேர்த்து வைத்த ரூ. 40 லட்சம் பணத்தை அவரிடம் அள்ளிக் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்க  "வடிவுக்கரசிக்கு என்னாச்சு?! பதறியடித்து போன் செய்த கமல்... தீயாய் பரவிய விஷயம்!"

சுவாதி பாணி கொலை மிரட்டல்
பணத்தைக் கையில் வாங்கிய பிறகு நடிகரின் அசல் சொரூபம் வெளியில் வரத் தொடங்கியது. திருமணப் பேச்சைத் தட்டிக்கழித்த சரவணனிடம், “கல்யாணம் பண்ணலன்னா பரவாயில்லை, என் பணத்தையாவது திருப்பிக் கொடு” என்று அந்தப் பெண் வழக்கறிஞர் கேட்டுள்ளார்.

அப்போதுதான் அந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பணத்தைத் தர மறுத்த சரவணன், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அரங்கேறிய கொடூரத்தைச் சுட்டிக்காட்டி, “பணத்தைக் கேட்டால் சுவாதியைப் போல உன்னையும் வெட்டிக் கொன்றுவிடுவேன்” என்று போனில் கொடூரமாக மிரட்டியுள்ளார்.

மிரட்டல் ஆடியோ… சிக்கிய சதி
ஒரு வழக்கறிஞருக்கே கொலை மிரட்டல் விடுத்த நடிகரின் திமிரை அடக்க, அப்பெண் துணிச்சலாக நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரோடு, சரவணன் தன்னைச் சுவாதி பாணியில் கொன்றுவிடுவதாகப் பேசிய மிரட்டல் ஆடியோ ஆதாரத்தையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அந்த ஆடியோவைக்கேட்டு அதிர்ந்துபோன காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சரவணனை சல்லடை போட்டுத் தேடிப்பிடித்து, கையில் விலங்கைப் பூட்டி சின்னத்திரை நடிகர் சரவணனை சிறைக்குள் தள்ளினர்.

இதையும் படியுங்க  "அரசியல் செல்வாக்கு வேண்டாம்.. உழைப்பால் பெயர் எடு! தந்தை விஜய் சொன்ன அட்வைஸை உடைத்த ஜேசன் சஞ்சய்!"

சினிமாவில் நல்லவராக நடித்துவிட்டு, நிஜத்தில் பெண் வழக்கறிஞரின் வாழ்க்கையிலேயே விளையாடி, ‘சுவாதி’ பெயரைக் சொல்லி மிரட்டிய இந்தச் சின்னத்திரை நடிகரின் கொடூர லீலைகள் தற்போது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago