Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Velu

தி.மு.க-வின் பலம்பொருந்திய அமைச்சராக வலம்வந்த எ.வ.வேலு-வுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஷாக் கொடுத்திருக்கிறது. ஏரி மண் கொள்ளை விவகாரத்தில் அவர் மீதும், அவரது மகன் குமரன் மீதும் அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 14-12-2025 அன்று திருவண்ணாமலை அருகே மலப்பாம்பாடியில் தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு பிரமாண்டமாக நடந்தது. இதன் மொத்த ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவர் அப்போதைய அமைச்சரும், வடக்கு மண்டல பொறுப்பாளருமான எ.வ.வேலு.

தனது மூத்த மகன் குமரன் பெயரில் ரூ.46 கோடிக்கு வாங்கப்பட்ட சுமார் 124 ஏக்கர் சர்க்கரை ஆலை நிலத்தில்தான் ‘கலைஞர் திடல்’ என்ற பெயரில் மாநாட்டுத் திடல் சமன்படுத்தப்பட்டது. இதற்காக அருகில் உள்ள மலப்பாம்பாடி ஏரியில் இருந்து ஆயிரக்கணக்கான லோடு மண் சட்டவிரோதமாக அள்ளப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு ரூ.8 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு என்று உழவர் உரிமை இயக்கமும், அறப்போர் இயக்கமும் குற்றம் சாட்டி, கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தன.

இதையும் படியுங்க  அமைச்சரவையில் விஜய் வச்ச ‘வேட்டு’! வீட்டுக்கு அனுப்பப்படும் 4 அமைச்சர்கள்? கசிந்த ரகசிய ரிப்போர்ட்!
Republic Tamil

அந்தப் புகாரின் அடிப்படையில்தான் இந்த மாதம் 24-ம் தேதி எ.வ.வேலு மற்றும் குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ” எ.வ.வேலு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, அதிகாரிகள் துணையோடு மலப்பாம்பாடி ஏரியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி மண் அள்ளியுள்ளார். மாநாட்டுத் திடலை சமன்படுத்த சுமார் 45,72,058 கன அடி ஏரி மண் கடத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.8,22,97,044 இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாநாடு நடந்த குடும்பச் சொத்தின் நுழைவு வாயில் வரை செல்ல ஏரியின் கரை மற்றும் உட்பகுதி வழியாக சட்டவிரோத அணுகுசாலையும் அமைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஊழல் புகாரில் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், தற்போது ஏரி மண் கொள்ளை வழக்கும் பாய்ந்திருப்பது எ.வ.வேலு தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இதையும் படியுங்க  விஜய் அரசுக்கு முழு ஆதரவா..? அந்த வரலாறே எங்களுக்கு கிடையாது..! CPI வீரபாண்டியன் திட்டவட்டம்..!
Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago