Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசின் சார்பில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Republic Tamil

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறையின் மாநில அளவிலான தேர்வுக் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். நடப்பாண்டில் மொத்தம் 396 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவர்களில் 389 பேருக்கு விருது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  “நீட் விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு.. ரத்து கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்..!”

விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் வெள்ளிப் பதக்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். அதன் ஒரு பக்கத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவமும், மறுபக்கத்தின் நடுவில் “தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை” என்ற முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் பி. சந்தரமோகன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் என். லதா வரவேற்புரையாற்றினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவின் நிறைவில் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் நன்றியுரை வழங்கினார்.

விழாவில் மேயர் பிரியா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Republic Tamil

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா 12 ஆசிரியர்கள் அதிகபட்சமாகத் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து குறைந்தபட்சமாக 5 ஆசிரியர்கள் இந்த ஆண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க  "லஞ்சப் பணத்தை திரும்ப வாங்கிக்கோப்பா.." கதறிய போலீஸ்; கலகலத்த வாலிபர்! பொள்ளாச்சி 'தரமான சம்பவம்' ஆடியோ வைரல்!

ஆசிரியர்களைக் கவுரவித்த அதே மேடையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளும் அடையாளமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு, விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்திருந்த இளம் ஆசிரியர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது.

மேலும், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் விஜய்க்கு ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதற்கு முதலமைச்சரும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரியர்களுக்கு மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது மட்டுமின்றி, மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது 2026-க்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் எம். தங்கராஜ் மற்றும் மதுரை திருப்பரங்குன்றம் பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா-2 பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெ. அமுதா ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதை வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்க   நிர்வாணமா பூஜை செய்யணும்... வீடியோ காலில் வா..! கனடா இளம் பெண்ணுக்கு வலைவிரித்த சென்னைபீச்' ஜோதிடர்'

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விப் பணியைப் பாராட்டும் வகையில் நடைபெற்ற இந்த விழா, சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. அறிவின் அடையாளமாகத் திகழும் இந்த நூலக அரங்கில் நல்லாசிரியர்களைக் கவுரவித்தது விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago