Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மறுநாள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானிலை மாற்றங்களின் காரணமாக, தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படியுங்க  லிவ்-இன் ரிலேஷன்ஷிப்..! அம்மாவை கொன்றுவிட்டு பாத்ரூமை கழுவிய மகள்..! தங்கைக்கும், தந்தைக்கும் நேர்ந்த கொடூரம்!
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 months ago at 5 months ago