Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு தொடர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டு விட்டது என்று தகவல் கிடைக்கப்பெற்றேன். மத்திய அரசின் VIP செக்யூரிட்டி விதிகளின் படி நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கூடுதலாக உள்ள ஒரு சில முதல்வர்களுக்கு Z+ பிரிவுக்கும் கூடுதலாக சிறப்பு பாதுகாப்பும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதே சமயம், இந்த முதல்வர்களில் சிலர் தங்களது முதல்வர் பதவியை இழக்க நேரிடும் போதோ அல்லது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் போதோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பான security review செய்யப்பட்டு அதன் படி அவர்களுடைய Z+ பிரிவு குறைக்கப்பட்டு அந்தந்த மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

இதையும் படியுங்க  தவெக ஆட்சியை கவிழ்க்க பகீர் பிளான்..! இனியும் விட்டு வைச்சா நாம காலி..! அதிமுக- திமுக கூட்டு சதி..!?

ஆனால், மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்ட Z+ பிரிவு பாதுகாப்பு அவர் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி ஏற்றபிறகு வழங்கப்படவில்லை. மாறாக, அவருக்கு 2006 ஆம் ஆண்டு முதல் Z பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்னவென்றால், 13.6.2006 அன்று மதுரை ரயில் நிலையத்தில் அவர் மீது ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது, அங்கே பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் காவலர் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டதின் விளைவாக மு.க. ஸ்டாலின் அவர்கள் இறைவன் அருளால் உயிர் தப்பினார். இந்த தகவல் அறிந்த உடனேயே, அப்பொழுது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஆ. ராஜா அவர்கள் மூலம் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் அவர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டு, மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கடிதங்களை draft செய்தவன் நான் என்ற முறையில் இந்த தகவலை இங்கு பதிவிடுகிறேன்.

இதையும் படியுங்க  மத்திய அரசை பாலோப் பண்றத தவிர விஜய்க்கு வேற வழியில்லை... தமிழிசை திட்டவட்டம்...!

டாக்டர் கலைஞர் அவர்களின் உத்தரவுப்படி, சம்பவம் நடந்த நாளுக்கு அடுத்த நாளே அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து கடிதங்களை அளித்து, மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்கள் இரண்டொரு நாட்களில் அதற்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சர் மூலம் வெளியிட ஆவண செய்தார். அதன் படி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு 2006 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசால் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, முதல்வர் பதவிக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படும் Z பிரிவு பாதுகாப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வழங்கப்பட்டு வந்த அதே Z பிரிவு பாதுகாப்பை இன்றும் தொடருவதற்கு தி.மு.க. தலைமை மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை வலியுறுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

இதையும் படியுங்க  “கரூர் வழக்கில் இருந்து தப்ப முதல்வர் டெல்லி விஜய் சென்றாரா..? மு.க.ஸ்டாலின் அதிரடி அட்டாக்..!

அமைச்சர் ஆ. ராஜா அவர்களால் எழுதப்பட்ட இந்த கடிதங்களின் நகல்கள் மற்றும் உள்துறையின் ஆணை அடங்கிய கோப்பினை, 31.10.2008 ஆம் தேதி நான் ஆ. ராஜா அவர்களை விட்டு பிரிந்து எனது துறைக்கு திரும்ப சென்ற போது, அவரிடம் பத்திரமாக கொடுத்து விட்டே வந்தேன். இந்தக் கடிதங்களின் நகல்கள் அவரிடம் இன்று வரை பத்திரமாக இருக்கும் என்றே நம்புகிறேன். மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கும், கழகத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்ற அடிப்படையில் அவர் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது அவா என்று தெரிவித்துள்ளார்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago