Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Rajamouli

இந்தியத் திரையுலகின் எல்லைகளை உடைத்தெறிந்து, உலகரங்கில் தாய்மொழியான தெலுங்கு சினிமாவின் கொடியைப் பறக்கவிட்ட மாபெரும் காட்சி ஆளுமை எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராகத் தடம்பதித்த அவரது திரைப் பயணம், இன்று வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி, இன்று ஆஸ்கர் மேடை வரை இந்திய சினிமாவை அரியணையில் அமர்த்திய ஒரு படைப்பாளியின் இந்த 25 ஆண்டுகாலப் பயணம், வெறும் வெற்றி வரலாறு மட்டுமல்ல; இந்தியத் திரையுலகிற்கான வழிகாட்டி காவியம்.

ஒரு எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, தன் உழைப்பாலும் கற்பனைத் திறனாலும் மட்டுமே இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர் ராஜமௌலி. என்.டி.ஆரின் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ மூலம் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம், ‘சிம்ஹாத்ரி’, ‘சயீ’, ‘சத்ரபதி’, மற்றும் ‘விக்ரமார்குடு’ எனத் தொடர்ச்சியான அகாடமி ரக வணிக வெற்றிப் படங்களால் மிளிர்ந்தது.

தீவிரமான உணர்ச்சிகளையும் , பிரம்மாண்டமான கதாபாத்திரப் பயணங்களையும் ஒன்றிணைப்பதே ராஜமௌலியின் பிரத்யேக பாணி. திரையில் ஒரு சாதாரணக் கதையைக் கூடத் தன் திரைக்கதை மாயாஜாலத்தால் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுவரும் வித்தையை அவர் இதில் கைகொண்டார்.

இதையும் படியுங்க  ஓட்டி ஓட்டி ஓட வைத்த சிவப்பு ஜெயண்டுகள்..! தெலுங்கில் தஞ்சம் புகுந்த காயடு லோஹர்..! அதிரடி மூவ்!

தெலுங்குச் சினிமாவில் அதிநவீன விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தையும், கிராபிக்ஸ் வித்தைகளையும் அறிமுகப்படுத்தியதில் ராஜமௌலிக்கு முக்கியப் பங்குண்டு. அவர் இயக்கிய மஹதீரா தென்னிந்தியச் சினிமாவில் ஃபேண்டஸி வகைப் படங்களுக்கு ஒரு புதிய இலக்கணத்தை எழுதியது.

ஒரு சாதாரண ஈயை நாயகனாக வைத்து, இயக்கிய நான் ஈ உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து, ‘கல்ட் கிளாசிக்’ அந்தஸ்தைப் பெற்றது.
!
இந்தியத் திரைப்பட வரலாற்றை ‘பாகுபலிக்கு முன்’, ‘பாகுபலிக்கு பின்’ என இரண்டாகப் பிரிக்க வைத்தவர் ராஜமௌலி. மாநில எல்லைகள், மொழி தடைகளை உடைத்து “பான்-இந்தியா” என்ற பிரம்மாண்ட கலாச்சாரத்திற்கு அடித்தளமிட்டார். பாகுபலியின் அசுரத்தனமான வசூலும், அதன் மேக்கிங்கும் இந்திய சினிமாவை உலகளாவிய வரைபடத்தில் கம்பீரமாக முன்னிறுத்தியது.

பாகுபலிக்குப் பிறகு ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மூலம் ராஜமௌலியின் புகழ் உலக எல்லைகளைத் தாண்டியது. அப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் அகாடமி விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தது. ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களே ராஜமௌலியின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்து பாராட்டினர்.

இதையும் படியுங்க  "கிராமத்து கதைகளின் நாயகனுக்கு விடை கொடுத்த தமிழகம்: கண்ணீர் கடலில் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு!"

25 ஆண்டுகாலத் தோல்வியறியா வரலாற்றுச் சாதனையை நிறைவு செய்யும் வேளையில், ராஜமௌலியின் அடுத்த படைப்பாக உருவெடுத்து வருகிறது ‘வாரணாசி’. உலகம் முழுவதும் பல்வேறு உலகத் தரம் வாய்ந்த இடங்களில் படமாக்கப்படும் அதிநவீன அதிரடிச் சாகசத் திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது.

காட்சிக் கற்பனையில் எல்லைகளற்ற ஒரு மாய உலகைப் படைத்து, கால் நூற்றாண்டு காலமாகத் தோல்வியே சந்திக்காத ‘திரையுலகப் பிரம்மா’ எஸ்.எஸ். ராஜமௌலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago