Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

TVK CAr

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கமே கார் வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார் கோவில் தொகுதி எம்.எல்.ஏ., ஜோதிமணி ஒரு விசித்திரமான கோரிக்கை வைத்தார். சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ., ஜோதிமணி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகன வசதிகளை செய்து தர வேண்டும்.. காலணி கூட அணிய முடியாத சூழ்நிலையில்தான் சட்டமன்ற உறுப்பினர்களின் நிதிநிலை இருக்கிறது. லஞ்ச லாவணியம் இல்லாத அரசு அமைவேண்டும் என்றால் நமது உறுப்பினர்களை நலமோடு பார்த்து கொள்ள வேண்டியது நமது கடமை.

ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணி செய்வதற்கு கார் ஏற்பாடு செய்து மற்ற அத்தியாவசிய வசதிகளையும் செய்து தரவேண்டும் எனப் பேசினார். ”ஐயா அதாவது 40 கிலோமீட்டர் என்னுடைய சுற்றளவு. அதனால போய் மக்களை சந்திச்சு, மக்களுக்கு பணி செய்யவேண்டும் என்கிற அளவுக்கு வாகன வசதி இல்லை. ஒன்று, இரண்டு செயலாளர்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களும் ஊதியம் கொடுத்து செய்கிற அளவுக்கு வசதி இல்லை. இப்படித்தான் இன்னைக்கு இருக்கிற சட்டமன்ற உறுப்பினர்கள் முக்காவாசி பேர் இருக்கிறார்கள். அதில் ஒன்றும் மாற்றமே இல்லை. அதில் அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவி செய்கிற வகையில் நீங்கள் அவர்களுக்கு வாகன வசதி, மற்றதை செய்து கொடுக்க வேண்டும். காலணி அணியாத எம்எல்ஏ கூட இங்கே இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  சவால் விட்ட விஜய்… சால்வை போர்த்திய ஸ்டாலின்..! பகை மறந்து பாசம் காட்டிய உதயநிதி..!

அப்படி இருக்கிற ஒரு சூழலில் லஞ்ச லாவண்யம் இல்லாத அரசு அமைய வேண்டும் என்றால் நம்முடைய உறுப்பினர்களை நலமுடன் வைத்து கொள்ள வேண்டியது தங்களுடைய என உண்மையான அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இதற்கு உடனே பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ”இது மாதிரியான சட்டமன்ற உறுப்பினர்களோட கோரிக்கை நிறைய வந்திருக்கு. நம் முதல்வர் கிள்ளி கொடுக்கிறவர் இல்ல. அள்ளி கொடுக்கிறவர். அதனால இந்த கோரிக்கை குறித்து முதலமைச்சரோட கவனத்துக்கு கொண்டு போய்
நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து ஸ்பாட்டிலேயே தனது உதவியாளர் மூலமாக அந்த பேப்பரை முதல்வர் கையிள் ஒப்படைத்தார்.

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் புது கார்கள் வாங்கி அதற்கு இஎம்ஐ கட்டுவதற்காக அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து லஞ்சம் வசூலிக்கிறார்கள் என்பதை நாம் ஏற்கனவே கூறி இருந்தோம். நாம் கூறிய அந்த சாரத்தை அப்படியே சட்டமன்றத்தில விசிக எம்எல்ஏ பேசி இருக்கிறார். இது சம்பந்தமாக அன்று மதியுமே அதிகாரிகளிடம் சபாநாயகர் ஆலோசனை செய்தபோது ஒவ்வொரு சட்டமன்ற தொடரிலும் எம்எல்ஏக்கள் எப்படி கார் வேணும்” எனக் கேட்கிறார்கள்.

இதையும் படியுங்க  கமிஷன் மாஃபியாவுக்கு விழுந்த சம்மட்டி அடி..! 1500 கோடியை மீட்ட முதல்வரின் ‘டாஸ்மாக் ஆபரேஷன்’!

எம்எல்ஏக்களுக்கும் கார் வாங்கி கொடுத்தால் அதற்கு டிரைவர் போடணும். பெட்ரோல், டீசல் போடணும். அதற்கு மெயின்டனன்ஸ் செலவு இருக்கிறது. இதெல்லாம் ஒரு பெரிய பட்ஜெட் ஆகும். எந்த அரசில் இப்படி எல்லாம் செய்தார்கள்? அதனால் அந்தந்த கட்சிகளே அவர்களுக்கு கார் வாங்கி தரட்டும் என அதிகாரிகள் தரப்பில்
முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago