Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அந்நியர் படை எடுப்பு போல அதிமுகவை அபகரித்த நினைத்தால் அதிமுக தொண்டர்கள் தற்கொலை படைகளாக மாறுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், 80 வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தாய்நாட்டு மக்களுக்கு பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சி உருவானபோது பழைய அரசியலுக்கு மாற்று ஜென்ஸி தலைமுறையின் அரசியல் என்ற அதிரடி அறிவிப்பு கொடுத்ததால் தான் முதல்வர் விஜய்யின் செல்வாக்கை தாண்டி உருவான மிகப்பெரிய எதிர்பார்ப்பு தான் தவெக கட்சியின் அரசியல் மூலதனமாக இருந்தது. இதுதான் தவெகவிற்கு இரண்டு ஆண்டுகளிலே கட்சி தொடங்கி இமாலய வெற்றியை தந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் 52 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்து வருகின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சிலர் ,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்க முடியாதால், தவெகவில் இணைந்த போது அது ஒரு இயல்பான விரிவாக்கமாகத்தான் முதலிலே பார்க்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் முதல் கிளைக் கழகம் வரை ஆள் பிடிக்கின்ற வேலையை தவெக முன்னெடுத்து வருவதால் தமிழக மக்களின் கேள்வியும் பார்வையும் வேறு திசை திசைக்கு வருகிறது. அதிமுகவின் வலிமையான நிர்வாகிகளை இன்றைக்கு அபகரித்து வருவது என்பது முழுக்க முழுக்க விஜயின் அதிகார துஷ்பிரயோகம்.

தேர்தல் நேரத்தில் விஜய் என்ன வீர முழக்கமிட்டார். இன்னைக்கு சாத்தியம் இல்லாத, கற்பனை காவியமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு அதில் மகளிருக்கு 2,500 உரிமைத்தொகை, ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், 4000ரூபாய் வேலையில்லா பட்டதாரிக்கு உதவி தொகை, 3000ரூபாய்ஷ முதியவர் ஓய்வூதியம், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லாம் வசதி அட்டகாசமாக அறிவிப்புகளை எல்லாம் தேர்தல் அறிக்கைகளை தந்து இதில் எதையும் இப்போது பட்ஜெட்டில் செயல்படுத்தாமல், பயிர் கடனை கூட முழுமையாக தள்ளுபடி செய்யாமல், 22,000 கோடி இந்த மூன்று மாதத்தில் கடன் வாங்கி இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி கடன் வாங்குவதற்கு இலக்கை நிர்ணயித்து உள்ளீர்கள்.

இதையும் படியுங்க  இபிஎஸ் வீடு தேடி வந்த அமைச்சர்..! அடுத்த நொடியே தவெக ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு நீக்கம்..!

இந்த சூழ்நிலையில் 80 ஆண்டு சுதந்திர விழாவில் சென்ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பாக்கியத்தை தமிழக மக்கள் உங்களுக்கு தாய் உள்ளத்தோடு தந்திருக்கிறார். ஆனால் அதற்கு என்ன நாட்டு மக்களுக்கு நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள்? இனிமேல் என்ன தியாகம் செய்ய போகிறீர்கள்.

ஒரு நாட்டை வழி நடத்துவதற்கு தியாகத்தின், கருணையின், மனிதநேயத்தின் அடையாளமாக
நாம் இதுவரை வரலாற்றில் படித்திருக்கிறோம் அப்படித்தான் இந்த நாட்டின் வரலாறு அமைந்திருக்கிறது. அந்த வரலாற்றுக்கு முரணாக டிஜிட்டல் டீமை கையிலே வைத்துக்கொண்டு, சோசியல் மீடியாவில் பெய்ட் ப்ரொபஷனல் டேட்டா கன்டென்ட் கிரியேட்டர்களை வைத்து, இன்ஸ்டா, ரீல்ஸ், பேஸ்புக்ல, வாட்ஸ்அப் ஆகியவற்றில் தங்களுடைய மாய பிம்பத்தை பிரம்மாண்டமாக கட்டமைப்புதில் சத்தியமாக நீங்கள் உலக சாதனை படைத்திருக்கிறீர்கள்.
மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி உங்களுடைய ஆற்றலை அதிலேய வெளிபடுத்தியுள்ளீர்கள். அதனால் தான் கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் தியாக சுவடே இல்லாமல் ஆட்சி அரியணையில் நீங்கள் அமர்ந்து விட்டீர்கள்

சட்டசபையில் உங்களை துதிபாடும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா உள்ளீட்டவர்கள் அடுத்து விஜய் இந்தியாவுக்கே பிரதமராக வரவேண்டும் என்று தனது ஆசையை இல்லை பேராசையை சட்டமன்றத்தில் தைரியமாக பதிவு செய்திருக்கிறார்கள் .

இதையும் படியுங்க  தவெகவின் 'அரைவேகாட்டு' வெற்றி..!? விஜயால் நிறைவேறிய மு.க.ஸ்டாலின் ஆசை..!

தாங்கள் இந்தியாவின் பிரதமராக அல்ல அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாக கூட வருவார், ஐக்கிய நாட்டு சபைக்கு தலைவராக கூட வருவார், சீன அதிபராக வருவார், இங்கிலாந்தின் இளவரசராக வருவார், தென்கொரிய அதிபராக கூட வருவார் என்றுகூட விஜயின் புகழைப் பாட துதி பாடும் விஜய்யின் அமைச்சர்களுக்கு எந்த வாய்ப்பூட்டு சட்டமும் கிடையாது தடையும் கிடையாது தமிழ்நாட்டில்.

அதிமுகவில் பிள்ளை பிடிக்கிற வேலையை தொடர்கின்ற நீங்கள், நான்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நான் தான் புரட்சித்தலைவி அம்மா, தவெக ஆட்சி தான் அதிமுக ஆட்சி என்று அதிமுகவின் அப்பாவி தொண்டர்களை, அதிமுகவின் விசுவாசத் தொடர்களை ஏமாற்றி அதிமுகவை அபகரிக்கவோ, அழிக்கவோ நீங்கள் முயற்சி எடுப்பது அதிமுகவின் கடைசி விசுவாசம் தொண்டன் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது .

அப்படியே தாங்கள் மோசடி செய்து இந்த சமூக வலைதளம் சோசியல் மீடியாவின் மூலமாக ஒரு அபாயகரமான மோசடி கட்டமைப்பை உருவாக்கி அதிமுகவை அழிக்கும் நிலை ஏற்பட்டால் முதல்வர் அவர்களே ஒன்று விசுவாச தொண்டர்களாக நாங்கள் உயிரோடு இருக்க மாட்டோம், இல்லையென்றால் 80வது சுதந்திர தினத்தைதினத்தில் கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய நீங்கள் உயிரோடு இருப்பீர்களா என்று எங்களுக்கு தெரியாது ?

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,புரட்சித் தலைவர் அம்மா விசுவாசத் தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுகின்ற அந்த சூழ்நிலையை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அப்படித்தான் நான் இருப்பேன் என்று சொன்னால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசுவாச தொண்டர்கள் இந்த புரட்சியை செய்வதற்கு, உரிமையை மீட்பதற்கு எந்த தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்பதை 80 வது சுதந்திர தின சூளுரையாக ஏற்கிறோம்.

இதையும் படியுங்க  இபிஎஸ்ஸுக்கு 'லெட்டர்' செக்… தவெக-விடம் 'அல்வா' பேக்… பாஜக-வுக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி..?

இந்த தமிழ் பாரம்பரியம் விஜய் அவர்களுக்கு தெரியும், செத்த பிறகு கூட வீரத்தை விதைப்பதற்காக நெஞ்சை கிழித்து அவன் வீரத்தை உலகத்திறகு எடுத்துச் சொல்வதற்கு அவன் மரணத்திற்குப் பிறகும் அந்த வீர தழும்பு ஏற்பட வேண்டும் என்பதுதான் தமிழர் பாரம்பரியம்.

அதேபோல அந்நியர் படையெடுத்து அபகரிக்க நினைத்தால் தாய் நாட்டை காப்பதற்காக தாய் தந்த உயிரை விலையாக கொடுத்தது தான் வீரமாக கொடுத்தது தான் விசுவாசமாக கொடுத்தது தான் தமிழர் பாரம்பரியம், தமிழர் பண்பாடு ,தமிழருடைய உரிமை முழக்கம் அதுவும் முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றாக தெரியும்.

அப்படி அந்நியர் படையெடுப்பு போல் அதிமுகவில் நுழைவுமானால், அபகரிக்க நினைத்தால் குடும்பத்திற்கு ஒருவர் வெற்ற வீர திலகம் இட்டு தற்கொலை படையாக புறப்பட்டு புரட்சியை நிகழ்த்திக் காட்டுவதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா எங்களுக்கு ஆசி வழங்குவார்கள் .

35 சதவீதம் மக்கள உங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள் அந்த நம்பிக்கை நிறைவேற்றிய வகையில் வறுமையை ஒழிப்பு,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தாருங்கள், தொழில்துறையில் வளர்ச்சி அடை செய்யுங்கள் ,விவசாயத் துறையை வளர்ச்சி அடைய செய்யுங்கள்.மேகதாது அணையை தடுத்து நிறுத்துங்கள், காவிரியில் உரிமையை பெற்றுத் தாருங்கள், முல்லைப் பெரியாறு புதிய அணையை தடுத்து நிறுத்துங்கள், முல்லை பெரியார் அணையின் உரிமையை மீட்டுத் தாருங்கள் ,கச்ச தீவை மீட்டு தாருங்கள், இதுபோல அற்புதத்தை தமிழகத்தில் நடத்திக் காட்டுங்கள் அன்னை தமிழகம் உங்களை வணங்கும் .

அதை விடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் அபகரிக்க நினைப்பது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் இது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களின் உள்ள குமுறலை வெளிப்படுத்தி அமைகின்றேன் எனக் கூறினார்

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago