Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

“இன்னும் நீண்ட காலம் கால்பந்து விளையாடுவேனா என்பதில் எனக்கே சந்தேகம் உள்ளது” என்று கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸியின் (Jorge Messi) மறைவுக்குப் பிறகு, தான் தொடர்ந்து கால்பந்து விளையாடுவது குறித்தே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மெஸ்ஸி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி, நீண்ட நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி காலமானதாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 68.


Republic Tamil

அடுத்த நாளான ஆகஸ்ட் 9ஆம் தேதி, ரொசாரியோ அருகே உள்ள பெரெஸ் பகுதியில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் மெஸ்ஸியின் குடும்பத்தினர் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணியைச் சேர்ந்த நெருங்கிய சிலர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் மெஸ்ஸி, லியோனல் மெஸ்ஸிக்கு தந்தையாக மட்டுமல்லாமல், அவரது ஆரம்பகால கால்பந்து வாழ்க்கையில் மேலாளராகவும், வழிகாட்டியாகவும் முக்கியப் பங்காற்றியவர்.

இதையும் படியுங்க  தாய்மைக்கு மதிப்பு! இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

தந்தையின் மறைவுக்குப் பிறகு மெஸ்ஸி வெளியிட்ட உருக்கமான பதிவில், “நீ இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், எப்படி தொடர்ந்து செல்லப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எப்போதும் கால்பந்து மட்டுமே விளையாடினேன். ஆனால், இப்போது நான் இன்னும் நீண்ட காலம் அதைத் தொடர்ந்து விளையாடுவேனா என்பதில் எனக்குப் பெரிய சந்தேகம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தந்தையின் விருப்பத்திற்காக விளையாடிய மெஸ்ஸி

உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜோர்ஜ் மெஸ்ஸியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தனது உடல்நிலையைப் பார்த்து மெஸ்ஸி உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து விலகிவிடக் கூடாது என்றும், அவர் கட்டாயம் போட்டியில் விளையாட வேண்டும் என்றும் ஜோர்ஜ் மெஸ்ஸி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனது தந்தையின் விருப்பத்திற்காகவே உலகக்கோப்பையில் விளையாடியதாக மெஸ்ஸி கூறியுள்ளார்.


Republic Tamil

உலகக்கோப்பை தொடரின்போது அல்ஜீரியாவுக்கு எதிரான லீக் போட்டியில் கோல் அடித்த பிறகு மெஸ்ஸி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அப்போது, “விளையாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு கடினமான சூழ்நிலையை நான் எதிர்கொண்டு வருகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தின் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க  "படுதோல்விக்கு பின் மெஸ்ஸி போட்ட அந்த ஒரு பதிவு! உறைந்து போன கால்பந்து உலகம்!

அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை ஜோர்ஜ் மெஸ்ஸி அறிந்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இறுதிப்போட்டி முடிந்து மெஸ்ஸி அவரைச் சந்தித்தபோது, தீவிர நோயின் தாக்கத்தால் ஜோர்ஜ் மெஸ்ஸியின் நினைவாற்றல் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டியில் பெனால்டி முறையில் தோல்வியடைந்ததாக அவர் தவறாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், உலகக்கோப்பை தொடரில் நடந்த நிகழ்வுகள் குறித்து தனது தந்தையுடன் மெஸ்ஸியால் விரிவாகப் பேச முடியாத சூழல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெஸ்ஸி தனது பதிவில், “நாம் இறுதிப்போட்டி வரை சென்றோம். ஆனால், உன்னால் அங்கு வர முடியவில்லை. உனக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் உடலும் கால்களும் அதற்கு ஒத்துழைக்கவில்லை” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

கால்பந்தில் இருந்து தற்காலிக விலகல்

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த இண்டர் மியாமி (Inter Miami) கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, அந்த அணியுடன் 2028ஆம் ஆண்டு வரை ஒப்பந்தத்தில் உள்ளார்.

இதையும் படியுங்க  IPL2026: திலக் ருத்ரதாண்டவம்… கடைசி 3 ஓவர் அதிரடி.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றி
Republic Tamil

எனினும், தந்தையின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரத்தின் காரணமாக, தற்போது கால்பந்து போட்டிகளில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான ரொசாரியோவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீண்டும் எப்போது போட்டிகளில் களமிறங்குவார் என்பதற்கான காலக்கெடு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தந்தையின் மறைவு மற்றும் கால்பந்தில் இருந்து விலகுவது குறித்த மெஸ்ஸியின் உருக்கமான பதிவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட சக வீரர்கள் மற்றும் கால்பந்து பிரபலங்கள் மெஸ்ஸிக்கு தங்களது ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

தனது சிறு வயது முதல் கால்பந்து பயணத்தில் பக்கபலமாக இருந்த தந்தையை இழந்துள்ள மெஸ்ஸி, தற்போது தனது வாழ்க்கையின் மிகக் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். அவர் மீண்டும் எப்போது கால்பந்து களத்துக்குத் திரும்புவார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago