Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

இந்திய திரையுலகில் அதிக செல்வாக்கும், உயர்ந்த பிராண்ட் மதிப்பும் கொண்ட டாப் 10 நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. நடிகைகளின் சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, விளம்பர ஒப்பந்தங்கள், சம்பளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ரூ.894 கோடி மதிப்புடன் பாலிவுட் நடிகை ஆலியா பட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆலியா பட், ‘ராஸி’, ‘கங்குபாய் கதியாவாடி’ உள்ளிட்ட படங்களின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும், 20-க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார்.

ரூ.849.3 கோடி மதிப்புடன் தீபிகா படுகோன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ‘ஓம் சாந்தி ஓம்’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீபிகா, இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அதிக செல்வாக்கு கொண்ட நடிகையாகத் திகழ்கிறார்.

ரூ.716 கோடி மதிப்புடன் ராஷ்மிகா மந்தனா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, ‘கீதா கோவிந்தம்’, ‘புஷ்பா’, ‘அனிமல்’ உள்ளிட்ட பான்-இந்திய திரைப்படங்களின் வெற்றியால் தேசிய அளவில் பிரபலமானார்.

இதையும் படியுங்க  "நடிகர் தனுஷுக்குள் இப்படியொரு கார்ப்பரேட் கில்லாடியா? பலரும் அறியாத அவரது சைலண்ட் பிசினஸ் சாம்ராஜ்யம்!"

இதனைத் தொடர்ந்து ரூ.588.4 கோடி மதிப்புடன் கரீனா கபூர் நான்காவது இடத்திலும், ரூ.494.1 கோடி மதிப்புடன் கியாரா அத்வானி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். கிருதி சனோன் ஆறாவது இடத்திலும், அனன்யா பாண்டே ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

ரூ.410.3 கோடி மதிப்புடன் சமந்தா ரூத் பிரபு எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, இந்திய அளவிலும் அதிக செல்வாக்கு கொண்ட நடிகையாக உருவெடுத்துள்ளார்.

Republic Tamil

ரூ.347.5 கோடி மதிப்புடன் தமன்னா பாட்டியா ஒன்பதாவது இடத்திலும், ரூ.325.6 கோடி மதிப்புடன் ஜான்வி கபூர் பத்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, மற்றொரு தேசிய அளவிலான பிராண்ட் மதிப்பு தரவரிசையில் ஆலியா பட் 93.9 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இந்திய நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து தீபிகா படுகோன் 89.2 மில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும், ராஷ்மிகா மந்தனா 75.2 மில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படியுங்க  "சூர்யா அரசியல் என்ட்ரி?! பரபரப்பு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிரடி அறிக்கை!"

ஒட்டுமொத்த இந்தியப் பிரபலங்களின் தரவரிசையில் நடிகர் ஷாருக்கான் 177.9 மில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். ரன்வீர் சிங் இரண்டாவது இடத்திலும், கிரிக்கெட் வீரர் விராட் கோலி 158.4 மில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆலியா பட் ஒட்டுமொத்த பட்டியலில் 6-வது இடத்திலும், ராஷ்மிகா மந்தனா 12-வது இடத்திலும் உள்ளனர்.

சமந்தா ரூத் பிரபு 43.1 மில்லியன் டாலர் மதிப்புடன் 21-வது இடத்தையும், தமன்னா பாட்டியா 36.5 மில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ராஷ்மிகாவின் விளம்பர ஒப்பந்தங்கள் 32-ல் இருந்து 42 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபலங்களின் வருமானத்தில் தொலைக்காட்சி விளம்பரங்களை விட இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக அறிக்கை கூறுகிறது. டாப் பிரபலங்களின் வருமானத்தில் 60 முதல் 75 சதவீதம் வரை டிஜிட்டல் விளம்பரங்கள் மூலம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறை டாப் 25 மதிப்புமிக்க இந்தியப் பிரபலங்களின் பட்டியலில் பெண் பிரபலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய திரையுலகில் நடிகைகளின் பிராண்ட் மதிப்பும், தேசிய அளவிலான செல்வாக்கும் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்க  வதந்திகளுக்கு சாட்டையடி! விஜய்யுடன் திரிஷா பகிர்ந்த 'அந்த' புகைப்படம்: இணையத்தில் வைரல்..
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago