Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் 10 விருதுகளைக் குவித்து இந்திய அளவில் தமிழ்த் திரையுலகம் மீண்டும் தனது முத்திரையைப் பதித்துள்ளது. சிறந்த திரைப்படம், இயக்கம், இசை, நடிப்பு, படத்தொகுப்பு, சண்டைப் பயிற்சி, துணை நடிகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கிடைத்த இந்த அங்கீகாரம், தமிழ் சினிமாவின் படைப்பாற்றலுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் சாதனையைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், தேசிய விருதுகளை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். தேசிய அளவில் தமிழ் சினிமா மீண்டும் தனது திறமையை நிரூபித்து, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்திருப்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Republic Tamil

இந்த விருதுகளில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதை வென்று கவனம் ஈர்த்துள்ளது. மேலும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக தனுஷுக்கு ‘ஸ்பெஷல் மென்ப்ஷன்’ (Special Mention) விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  விஜய் ஆட்சியில் சபாஷ்..! மாதம் ரூ 51 கோடி மிச்சம்..! மதுபான கொள்முதலில் இனி வெளிப்படைத்தன்மை..!

தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு, தனது சமூக வலைதளப் பதிவில், “நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது. ஆனால் இயக்குநராகப் பெறும் முதல் தேசிய விருது என்பதால் இந்த தருணம் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Republic Tamil

மறுபுறம், ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளராக தேசிய விருது பெற்றுள்ள ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மூன்றாவது தேசிய திரைப்பட விருதை வென்று புதிய சாதனை படைத்துள்ளார். முதலமைச்சரின் வாழ்த்துச் செய்திக்கு நன்றி தெரிவித்து, “இந்த அங்கீகாரம் எனது இசைப் பயணத்திற்கு மேலும் ஊக்கமளிக்கிறது” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே திரைப்படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும், ஆர். கலைவாணன் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதையும் வென்று தமிழ்த் திரையுலகிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர். முதலமைச்சரின் வாழ்த்துக்கு பதிலளித்த ராஜ்குமார் பெரியசாமி, தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க  100 நாட்களிலேயே மக்கள் விரோத அரசு! லிஸ்ட் போட்டு தவெக அரசை கிழித்து தொங்கவிடும் வானதி சீனிவாசன்!

இதனுடன், ‘மகாராஜா’ திரைப்படத்திற்காக அனல் அரசு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருதையும், சச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர். மேலும், ‘மெய்யழகன்’ திரைப்படத்திற்காக சுரேன் ஜி மற்றும் ‘புளூ’ குறும்படத்திற்காக டி.எஸ். ஹரிஹரசுதன் ஆகியோரும் தேசிய விருதுகளை வென்று தமிழ் சினிமாவின் சாதனைப் பட்டியலை மேலும் உயர்த்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்துச் செய்தியில், ஒரே ஆண்டில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று தமிழ் சினிமா படைத்துள்ள இந்த வரலாற்றுச் சாதனை, மாநிலத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலுக்கு கிடைத்த மிக உயர்ந்த அங்கீகாரம் என்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இந்த வெற்றி, உலக அரங்கில் தமிழ் சினிமாவின் மதிப்பையும் செல்வாக்கையும் மேலும் உயர்த்துவதோடு, புதிய தலைமுறைக் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய விருது வென்ற கலைஞர்கள் அனைவரும் முதலமைச்சரின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து, இந்த அங்கீகாரம் தங்களின் கலைப் பயணத்தில் மறக்க முடியாத மைல்கல்லாக இருக்கும் என்றும், இனி மேலும் தரமான படைப்புகளை வழங்க இது உற்சாகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்க  "இரட்டிப்பு மகிழ்ச்சியில் 'டாடி' கவின்! வாரிசுகளுக்கு சூட்டிய அபூர்வ பெயர்கள்... இணையத்தை நனைய வைக்கும் நெகிழ்ச்சிப் பதிவு!"
Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 months ago at 3 months ago