Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

புதிய ஆட்சி வந்ததும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நிர்வாக வசதிக்காக மாற்றம் செய்வது வழக்கமானதுதான். அதன்படி கொத்துக் கொத்தாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 1 வாரமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக ளுக்கு ஆளாகி ஒரே துறையில் நங்கூரம் மாதிரி உட்கார்ந்திருக்கும் சில அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்ய வேண்டாம் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

அதாவது, வனத்துறையின் செயலாளராக இருக்கும் சுப்ரியாசாகு ஐ.ஏ.எஸ்., இந்த துறையிலேயே கோலோச்சி வருகிறார். இவர் மீது, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரத்தில் 500 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல, கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் தனி நபர்கள் ரெசார்ட் நடத்துவதில் அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுத்த வகையிலும் ஊழல் புகார் இவர் மீது இருக்கிறது. அப்படியிருந்தும் சுப்ரியாசாகுவை இடம்மாற்றாமல் வைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.

அதேபோல, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் கமிஷனராக இருக்கும் மோகன் ஐ.ஏ.எஸ்., தமிழகத்தில் நடக்கும் சட்ட விரோத குவாரிகளின் சூத்திரதாரி. இல்-லீகல் மைன்ஸ் மூலம் இவர் அடித்த கொள்ளைகள் ஏராளம். தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி, சட்ட விரோத குவாரிகளை திறந்து விட்டதும் இவர்தான். இந்த விசயம் வெளியே வராமல் இருக்க, அவ்வப்போது சில லாரிகளை மடக்கிப் பிடித்து விளம்பரப்படுத்திக் கொள்வார் மோகன்.

இதையும் படியுங்க  முதல்வர் விஜய் போட்ட எக்ஸ் (X) பதிவு: இணையத்தில் வைரலாகும் "சமூக நீதி வணக்கம்"!

புதிய ஆட்சியில், சுரங்கத்துறையின் அமைச்சராக இருக்கும் பிரபு, மோகனின் இந்த ஊழல் லீலைகளை கண்டறிந்து, முதல்வர் விஜய்யிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நட்பு வளையத்தை மோகன் ஐ.ஏ.எஸ். உருவாக்கி வைத்திருப்பதால் அவர் மூலம் மைன்ஸ் டிபார்ட்மெண்ட்டை தக்க வைத்து வருகிறார் மோகன். இவரை மாற்ற வேண்டும் என்று அமைச்சர் பிரபுவும், மாற்றக்கூடாது என ஆதவ் அர்ஜுனா வும் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago