https://republictn.com/

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி 85, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (மே 30, 2026) காலை சென்னையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வு தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாயார் மறைந்த செய்தியை அறிந்த நடிகர் அஜித்குமார், தற்போது துபாயில் இருந்து அவசரமாக சென்னை திரும்பி வருகிறார்.

அஜித்குமார் சென்னை வந்தடைந்த பிறகு, அவரது தாயார் மோகினி மணியின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, அஜித்குமாரின் தந்தை பி.எஸ். சுப்பிரமணியம் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தற்போது தாயாரும் மறைந்துள்ளதால் அஜித்குமாரின் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அஜித்குமாரின் தாயார் மறைந்த செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago