Republic Tamil

டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனத்தைத் தொடர்ந்து, தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான 1+1 இலவச ரீசார்ஜ் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ், குறிப்பிட்ட சில திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் போது இரட்டிப்பு செல்லுபடி காலத்தைப் பெற முடியும்.

சலுகை யாருக்குக் கிடைக்கும்?
இந்தச் சலுகை அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது. நீண்ட காலமாக தங்களது ஏர்டெல் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யாமல் வைத்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

ரூ. 349 மற்றும் ரூ. 399 திட்டங்களின் பலன்கள்:
ஏர்டெல் ஆப் வழியாக இந்த ரூ. 349 அல்லது ரூ. 399 ஆகிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்யும்போது இந்த இலவச சலுகை பலன் கிடைக்கும்.

இந்த இரு திட்டங்களும் வழக்கமாக 28 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வருபவை. ஆனால், இச்சலுகைக்குத் தகுதியான பயனர்கள் ரீசார்ஜ் செய்யும்போது, கூடுதலாக ஒரு மாத திட்டம் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும். இதனால் 28 நாட்களுக்குப் பதிலாக மொத்தம் 56 நாட்கள் செல்லுபடி காலம் கிடைக்கும்.

இதையும் படியுங்க  டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் தடாலடி மாற்றம்..! இனி கட்டணமே கிடையாது..! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!

இரு திட்டங்களிலும் இந்தியா முழுவதும் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமெடெட் கால், தினசரி 100 எஸ்எம்எஸ் பலன்கள் கிடைக்கின்றன. இந்த இரு திட்டங்களின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் தினசரி டேட்டா அன்லிமிடெட். வாடிக்கையாளர்கள் எந்தவொரு தடையுமின்றி அன்லிமிடெட் 4ஜி, 5ஜி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் சலுகையைப் பெறுவது எப்படி?
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அதிகாரப்பூர்வ Airtel செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். உங்கள் ஏர்டெல் மொபைல் எண் மற்றும் அதன் ஓடிபி பயன்படுத்தி உள்நுழையவும். பின்னர் செயலியில் உள்ள ‘Recharge’ ஆப்ஷனைக் கிளிக் செய்து, ரீசார்ஜ் திட்டப் பக்கத்திற்குச் செல்லவும். உங்கள் எண் இச்சலுகைக்குத் தகுதியுடையதாக இருந்தால், ரூ. 349 மற்றும் ரூ. 399 திட்டங்களின் விலைக்குக் கீழே அல்லது திட்ட விவரப் பகுதியில் “1+1 Free Recharge” என்ற சலுகை வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அங்கிருந்து நீங்கள் ரீசார்ஜ் செய்தவுடன், முதல் 28 நாட்களுக்கான திட்டம் முடிந்த பிறகு, இரண்டாவது மாதத்திற்கான இலவச ரீசார்ஜ் பலன் தானாகவே உங்கள் எண்ணில் ஆக்டிவேட் ஆகிவிடும். நீண்ட நாட்களாக ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் ஏர்டெல் சிம் கார்டுகளை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஏர்டெல் நிறுவனம் இந்த அதிரடி உத்தியைக் கையாண்டுள்ளது.

இதையும் படியுங்க  இந்தியாவிலேயே முதன் முறை..! ஜியோ களத்தில் இறக்கிய மாஸ் திட்டம்… எல்லாமே அன்லிமிடேட்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *