Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Mother’s Run

டிராக் சூட் இல்லை. பிராண்டட் ஷூ இல்லை. எனர்ஜி டிரிங்க் இல்லை. ஏசி ஜிம் இல்லை. இருப்பதெல்லாம் கிழிந்த புடவை, வெறும் கால்கள், கண்களில் ஒரு கனவு மட்டும்தான்!

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், துல்மி பிளாக், சோசோ கிராமம். அங்குதான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்திருக்கிறது. பெயர் கவிதா குமாரி என்கிற கவிதா மஹதோ. வயது 27.யார் இந்த கவிதா? மூன்று வருடங்களுக்கு முன் கணவரை இழந்த கைம்பெண். இரண்டு பச்சிளம் குழந்தைகள், வயதான மாமனார், மாமியார். குடும்பத்தின் ஒரே நம்பிக்கை இவர்தான்.

வாழ்க்கையை ஓட்ட, தினமும் காலை முதல் மாலை வரை செங்கல் சூளையில் கூலி வேலை. சூளையின் அனல் ஒரு பக்கம், வாழ்க்கையின் அழுத்தம் இன்னொரு பக்கம்.இந்த நிலையில்தான் ஜார்க்கண்ட் ஊர்க்காவல் படை (Home Guard) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வருகிறது. அரசு வேலை, நிலையான சம்பளம், குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம் என்ற கனவில் விண்ணப்பிக்கிறார்.

இதையும் படியுங்க  It might be true that fake handbag manufacturing could support

அந்த 6 நிமிடம்!ஊர்க்காவல் படைக்கான உடல் தகுதித் தேர்வு. விதி என்ன தெரியுமா? 1,600 மீட்டரை 10 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும். பயிற்சி மைதானம் – ராம்கரில் உள்ள சித்தோ-கன்கு மைதானம்.

சுட்டெரிக்கும் வெயில். பலர் டிராக் சூட்டில், ஷூவில் தயாராக நிற்க, கவிதா நின்றது புடவையுடன், வெறும் காலில்.யாரும் எதிர்பார்க்கவில்லை. விசில் சத்தம். ஓட்டம் தொடங்கியது. புடவையை தூக்கி சொருகிக்கொண்டு, வெறும் கால்கள் தரையில் பட… பட… என அடிக்க, அந்த தாய் பறந்தார்.

வெறும் 6 நிமிடத்தில் 1,600 மீட்டரை கடந்தார். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 4 நிமிடம் முன்னதாக! அங்கிருந்தவர்கள் வீடியோ எடுக்க, அந்த வீடியோ இப்போது இந்தியா முழுக்க வைரல். வசதி இல்லை, ஆனால் வைராக்கியம் இருக்கு!

கவிதாவிடம் ஓடுவதற்கான ஷூ, டிராக்சூட் வாங்கக் கூட காசு இல்லை. என்ன செய்தார் தெரியுமா? தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, சேலையிலேயே பயிற்சி செய்தாராம். கால்களில் காலணி இல்லை… ஆனால் கண்களில் கனவு! யிற்சி அகாடமி உறுப்பினர்கள் நேரில் வீட்டிற்கு சென்று கவிதாவை பாராட்டி கௌரவித்ததாகவும் தகவல். இது வெறும் 1,600 மீட்டர் ஓட்டம் அல்ல. வறுமையை தாண்டி ஓடிய ஓட்டம்.

இதையும் படியுங்க  'மெலோடி..!' ராஜதந்திரம்’ முதல் கொலோசியம் வரை..! மோடி -மெலோனியில் வைரல் செல்ஃபி..!
Mother’s Run.

ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக, தன் குடும்பத்தின் எதிர்காலத்துக்காக ஓடிய நம்பிக்கை ஓட்டம். அக்டோபர் 24 முதல் நவம்பர் 5 வரை அதிகாரப்பூர்வ உடல் தகுதி தேர்வு நடக்க இருக்கிறது. இந்த பயிற்சி ஓட்டத்திலேயே 6 நிமிடத்தில் சாதித்த கவிதா, அதிகாரப்பூர்வ தேர்விலும் சாதிப்பார் என்று சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

செங்கல் சூளையின் புழுதியில் இருந்து, அரசு சீருடைக்கு… கவிதாவின் ஓட்டம் தொடரட்டும்!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago