Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

CM Vijay

முதலமைச்சர் விஜய், அமைச்சர்களுக்கான ஒரு பிரத்தயேகமான உளவுத்துறையை உருவாக்கி இருக்கிறாராம் இதன் மூலமாகவே கட்சியிலும், ஆட்சியிலும் நடக்கிற விவகாரங்களை தெரிந்து கொண்டு தப்பு இருந்தால் நடவடிக்கைக்கு உத்தரவிடுவதாகச் சொல்கிறார்கள்.

ஆட்சி மேலிடத்தில், அமைச்சர்கள் மட்டத்தில் என இரண்டாக பிரித்து இருக்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து அமைச்சர்களாகவும், அதிகார மையமாகவும் ஒரு பிரிவு இருந்து கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் மற்ற கட்சியில் இருந்து இப்போது முதல்வர் விஜய்க்கு பக்கத்திலேயே இருக்கக்கூடிய ஒரு பவர் சென்டர் இன்னொரு தனிப்பிரிவாக இருக்கிறது. இந்த இரண்டு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் முதல்வர் விஜயிடம் ஆட்சி அமைந்த நாளில் இருந்தே தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டு வருகிறார்கள்.

Bussy Anandh

சமீபத்தில் பருவ மழைக்கான முன்னேற்பாடுகளுக்காக பல கோடிகளுக்கு ஒரு டெண்டர் விடப்பட்டது. இதில் ஒரு குறிப்பிட்ட அமைச்சர் சிண்டிகேட் போட்டு வேண்டப்பட்டவங்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டார் என ஒரு குரூப் முதல்வர் விஜயிடம் பற்ற வைத்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரு குரூப் ரெக்கமெண்ட் செய்து பெரிய பதவிகள்ல உட்கார வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதையும் படியுங்க  "ஒரு வார்த்தை படிக்கத் தெரியாதவங்க எல்லாம்..." - மைக் பிடித்து தாராபுரம் திமுக வேட்பாளர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!

ஆனால் அந்த அதிகாரிகளை இப்போது ஆட்சி மேலிடம் மொத்தமாவே ஓரம் கட்டி இருக்கிறது. இதற்கு காரணம் எதிர் தரப்புகு போட்டுக் கொடுத்ததுதான் என்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் முதல்வர் விஜய் சாதாரணமாக உள்வாங்கிக் கொண்டு ரியாக்ஷனே காட்டாமல் வெளியில நடக்கக்கூடிய விவகாரங்களை பற்றி தெரிந்து கொள்கிறார். இரு குரூப்பும் சொல்லக்கூடிய புகார்களை அதிகாரிகள் மூலமாக கிராஸ் செக் செய்து நடவடிக்கை எடுக்கிறாராம் முதல்வர் விஜய். இதனால் அமைச்சர்கள் மட்டத்தில், அதிகாரத்தில் இருக்கக்கூடிய பாலிடிக்ஸும், மாவட்ட அளவில் உட்கட்சி விவகாரங்களும் முதல்வரின் கவனத்துக்கு தெரிய வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Republic Tamil

குறிப்பாக மதுரையை மையமாக வைத்து வெளியில் இருந்து கட்சிக்கு வந்து அமைச்சராகி ,ஒட்டுமொத்த தென்மாவட்ட எம்எல்ஏக்களையும் ஆட்டி படைக்கிறதும் முதல்வருக்கு போட்டு கொடுக்கப்பட்டுள்ளதாம். முதல்வரின் இந்த பிரத்தியேகமான உளவுத்துறைதான் ஆட்சி மேல்மட்டத்தில பரபரப்பான பேசு பொருளாகி இருக்கிறது.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago