Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Trisha

நடிகர் விஜயின் தவெக- பாஜக இடையே மறைமுக உறவு இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்கள், தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகின்றன.

இந்த விமர்சனம் உருவானதற்கான காரணங்களாக கூறப்படுவது விஜய் தனது அரசியல் உரைகளில், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் காரசாரமாக விமர்சித்து வருகிறார். ஆனால் பாஜக மீதான அவரது விமர்சனம் திமுக அளவிற்கு அழுத்தமாக இல்லை என்றும், இதன் மூலம் பாஜகவின் குரலாகவே அவர் செயல்படுகிறார் என்றும் திமுகவும், அதன் தோழமைக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

வழக்கமாகத் தமிழகத்தில் புதிதாக வரும் அரசியல் கட்சிகள் மீது வைக்கப்படும் அதே விமர்சனம் விஜய்யின் மீதும் வைக்கப்படுகிறது. பாஜகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரித்து, திமுகவின் வெற்றி வாய்ப்பைக் குறைப்பதற்காகவே தவெக செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.

Vijay Amit shah

மத்திய பாஜக அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்துப் பேசும்போது நேரடித் தாக்குதலைத் தவிர்த்து, மாநில அரசையே அதிகம் விமர்சிக்கிறார் என்ற பார்வையும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதையும் படியுங்க  விசிக-வை உடைத்து விடுவேன்..! திருமாவை மிரட்டும் 5 விஐபி-கள்..! துர்கா ஸ்டாலின் காலில் விசிக தலைவர்கள்..! பகீர் சீக்ரெட்..!

தவெகவின் கொள்கைப் பிரகடன மாநாடு, பொதுக்கூட்டங்களில், “மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி” தான் தங்கள் கட்சியின் பிரதான கொள்கை என விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். தவெக தரப்பில், பாஜகவை “கொள்கை எதிரி” என்றும், திமுகவை “அரசியல் எதிரி” என்றும் வரையறுத்துள்ளனர். எனவே பாஜகவுடன் தங்களுக்கு எந்தவித மறைமுகக் கூட்டணியோ அல்லது உடன்பாடோ இல்லை என்பதை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

தங்களது கட்சி எந்தவொரு தேசியக் கட்சியின் நிழலிலும் செயல்படவில்லை என்றும், திராவிட மற்றும் தமிழ் தேசியக் கோட்பாடுகளை இணைத்த ஒரு மாற்று அரசியலையே முன்வைப்பதாகவும் தவெக நிர்வாகிகள் உறுதியளிக்கின்றனர்.

இந்நிலையில் திமுக ஆதரவாளர் புகழேந்தி தனது எக்ஸ்தளப்பதிவில், ”கனிவான கவனத்திற்கு… அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் விஜய் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார். அடுத்தாக விஜய்யின் மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.

VIJAY Ajith

விஜய் – அமித்ஷா சந்திப்பு. விஜய்யின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.) கட்சி தொடங்கப்பட்டதும் பிஜேபியின் ‘IT wing’ ல் செயல்பட்ட சி.டி.ஆர்.நிர்மல் குமார் விஜய் கட்சியில் சேர்ந்தார். அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.

இதையும் படியுங்க  மோடிக்கு விஜய் அனுப்பிய ஸ்ட்ராங்க் மெசேஜ்..! தும்பைவிட்டு வாலைப்பிடிக்கும் காங்கிரஸ்..!

லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா ‘விசிக’விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். விஜய் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம் இருந்து. ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார். ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும் என்று உத்தரவு.

கரூர் பிரசாரத்தில் 41 பேர்கள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு வந்தது. விஜய் அரசியலை விட்டு விலகுவதாக ஒரு முடிவை எடுக்கிறார். மீண்டும் அமித்ஷா – விஜய் சந்திப்பு. முதல் தேர்தலிலேயே விஜய்யை வெற்றி பெற வைத்து விடுகிறோம் என்று அமித்ஷா உறுதியளித்தார். அதன்படியே 108 தொகுதிகளில் வெற்றி பெறவும் வைத்து விட்டார்.

இதையும் படியுங்க  "தூசி தட்டப்படும் பழைய கோப்புகள்: திமுக மாஜிக்களுக்குப் பாயும் அடுத்தடுத்த நீதிமன்ற செக்!"

விஜய் முதல்வர் பதவியும் ஏற்று விட்டார். திரைமறைவில் அனைத்து வேலைகளையும் செய்தது RSS & பாஜக. விஜய்யின் வெற்றியைக் கொண்டாடுவது நாக்பூர் RSS பார்ப்பனியர்கள்தான்” எனக் கூறியுள்ளார். இதற்கு கமெண்ட் செய்துள்ள பலரும், ”என்னடா கதை இது..?” என பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago