Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

adhav

நீர்வளத்துறையில் ‘எம்’ ஃபண்ட் அதாவது மினிஸ்டர் ஃபண்ட் வசூலிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். செப்டம்பர் 22 ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்து துறை இன்ஜினியர்கள் கூட்டத்தை கூட்டி ரொம்ப வீரியமாக நடத்தி இருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொதுப்பணித்துறை மாவட்ட அலுவலர்கள் எல்லாம் ஒரே காம்பவுண்டுக்குள் வரவேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போல் நாம் அதை தரமாக மாற்ற வேண்டும். நம் துறை டெண்டர்கள் எல்லாம் ஓப்பனாக வெளிப்படையாக இருக்க வேண்டும்.

எந்தவிதமான கரப்ஷனும் கமிஷனும் இருக்கவே கூடாது என மேடையில் உட்கார்ந்து பாடம் எடுக்கிற மாதிரி கிளாஸ் எடுத்து இருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த இன்ஜினியர்கள் எல்லாம் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்றால் ”துறையில புதுத்திட்ட பணிகளுக்கு அரசாங்கத்துல நிதியே ஒதுக்கலையா? இதுல எங்க இருந்து பாரின் லெவலுக்கு நம்ம கொண்டு வரதான். நாலு மாசமா எந்த வேலையும் இல்லாம வெறும் மீட்டிங் மட்டுமே நடத்திட்டு இருக்காங்க. அமைச்சர் பேசுறாரு நாம வந்து உட்கார்ந்து கேட்டுட்டு போறோம். வேற என்னயா பண்றது அவரு பாட்டுக்கு மீட்டிங் போட்டுட்டே இருக்கட்டும். நாமளும் வந்து அப்படியே ஆகட்டும் ஐயா அப்படின்னு சொல்லிட்டு போவோம்” என நக்கலாக கமெண்ட் அடித்து விட்டு போயிருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  இதுதான்யா உண்மையான மக்கள் நலன்..! வீட்டுக்கும், ஆபீஸுக்கும் நடுவுல டிராஃபிக்கே இருக்காது. cm விஜய்யின் மாஸ்டர் பிளான்?!
adhav

ஆனால் இதில் முக்கியமான விஷயம் அதுவல்ல. அடுத்த நாள் செப்டம்பர் 23ஆம் தேதி காலையில் முக்கியமான உயரதிகாரிகளுக்கு அவசர அவசரமாக ஒரு போன் போயிருக்கிறது. போனை போட்டது வேற யாரும்
இல்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் ஆபீஸில் இருந்துதான். ”எந்த தப்பும் வெளியில தெரியிற மாதிரி செய்ய வேணாம். ரொம்ப பார்த்து கவனமா டீல் பண்ணுங்க” என அதிகாரிகளுக்கு அவசர அறிவுறுத்தல் கொடுத்து அலற வைத்திருக்கிறார்கள். இது வேற தலைவலியா என அதிகாரிகள் ஆடி போயிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நீர்வளத்துறையில் இதுவரை கூறப்பட்டிருக்க டெண்டர்கள் அனைத்தையும் அவசர அவசரமாக கேன்சல் செய்யப்பட்டு அக்டோபர் ஏழாம் தேதி அன்று புது டெண்டர்கள் திறக்கப்பட போகிறது.

ஆனால் அங்கதான் ஒரு மெகா ட்விஸ்ட் நடக்கப்போகிறது. அந்த ஏழாம் தேதி விடப்போகிற அந்த டெண்டரில் டீலிங்கை ரகசியமாக வைத்துக் கொள்ளுங்கள். மினிஸ்டர் ஃபண்ட் 15% ஆபீசர்ஃபண்ட் 5% என சேர்த்து கொள்ளச் சொல்லி ஒப்பந்ததாரர்களிடம் மறைமுகமாக சொல்லி விடுங்கள் என அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து புதிதாக உத்தரவு போயிருக்கிறது. ஒரு தவறு நடக்கிறது என சுட்டிக்காட்டினால் அந்த தவறை செய்ய மாட்டார்கள் எனப் பார்த்தால் அதை எப்படி வேற மாதிரி செய்யலாம் என பிளான் போட்டு இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  "மார்க்கெல்லாம் போட முடியாது…"தம்பி விஜய் பட்ஜெட்-ல இவ்வளவு ஓட்டையா?" - வெளுத்து வாங்கிய பிரேமலதா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago